Local

கொழும்பில் பெருமளவில் இராணுவத்தினர் குவிப்பு! – கவச வாகனங்களில் ரோந்து

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு நகரில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்குளி, மோதரை, மாளிகாவத்தை, பஞ்சிகாவத்தை, மருதானை, புறக்கோட்டை, வெள்ளவத்தை உள்ளிட்ட கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் இராணுவத்தினர் துருப்புக்காவி கவச வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகளுடன் ரோந்துக் காவலில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவத்தின் சிறப்புப் படையின் மோட்டார் சைக்கிள் படையணியும் தீவிரமான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

வழக்கத்துக்கு மாறாக அதிகளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading