குருணாகலில் தீயில் கருகிய முஸ்லிம்களின் சொத்துக்கள்!
குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய, ஹெட்டிபொல, மடிகே, அனுக்கான, கொட்டாம்பிட்டிய, ரஸ்நாயக்கபுர மற்றும் கொபெய்கனே ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் பல வர்த்தக நிலையங்கள் சிங்கள வன்முறையாளர்களினால் இன்று அடித்து நொறுக்கப்பட்டன. சில வர்த்தக நிலையங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அதேவேளை, வீடுகள், வாகனங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பள்ளிவாசல்கள் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டன.







