Local

மகள் படுகொலை! தாய் படுகாயம்!! – நொச்சியாகமவில் கொடூரம்

நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யுவதி ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். அத்துடன், மற்றொரு பெண் படுகாயமடைந்துள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு பெண்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்படும்போது 21 வயதுடைய யுவதி உயிரிழந்துள்ளார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் படுகாயமடைந்த பெண்ணின் இரண்டாவது கணவர் எனவும், உயிரிழந்த யுவதி படுகாயமடைந்த பெண்ணின் முதலாவது கணவனுக்குப் பிறந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நொச்சியாகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading