Local

மக்களே அவதானம்! மீண்டும் டெங்கு தலைதூக்கும் அபாயம் – 39 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் பல பகுதிகளிலும் மழைபெய்துவருவதால், டெங்குநோய் பரவும் அபாயமிருப்பதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பூச்சியியல் தொடர்பிலான ஆய்வுகளை நடத்தும் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜின் சுமனசேன தெரிவித்தார்.

எனவே, வீட்டையும், வீட்டு வளாகத்தையும் சுத்தமாகவும், நீர்த்தேங்கிநிற்காத வகையிலும் வைத்துகொள்ளுமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர்.

அதேவேளை, நாடு முழுவதிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு டெங்கு ஒழிப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால், 39 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு நாட்களுக்குமேல் காய்ச்சல் அல்லது உடம்பு வலி நீடிக்குமானால் வைத்திய ஆலோசனையை கட்டாயம் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading