Local

மீண்டும் நேரில் சந்தித்த மைத்திரி – மஹிந்த! நடுவில் கோடரியுடன் அமர்ந்திருந்த வேடுவர் தலைவர்!! – உஷாரடைந்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இரண்டாவது தடவையாக நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர் என்று கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றின் அரசியல் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

பரந்தளவிலான இடைக்கால கூட்டணி அரசு ஒன்றை அமைப்பதற்கான இரகசியப் பேச்சுக்களை நடத்திய இரண்டு நாட்களின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

நீர்கொழும்பில் உள்ள luxury Grandeeza விடுதியில் ஒரு திருமண நிகழ்விலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

அப்போது, விடயங்கள் தவறாகி விட்டன இல்லையா, என்று மைத்திரிபால சிறிசேனவை மஹிந்த ராஜபக்ஷ புன்னகையுடன் வரவேற்றார். அதற்கு மைத்திரிபால சிறிசேனவும்,அப்படித்தான் என்று கூறினார்.

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீரிகம அமைப்பாளர் சஞ்சய ஸ்ரீவர்த்தனவின் மகளுக்கும், மஹிந்த ராஜபக்ஷவை நிழல் தலைவராகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் சந்தியா சிறிவர்த்தனவின் மகனுக்குமே திருமணம் இடம்பெற்றது.

இந்த திருமணத்துக்கு வேடர் சமூகத்தின் தலைவர் உருவரிகே வன்னிலா அத்தோவும் அழைக்கப்பட்டிருந்தார். பிரதான மேசையில் அவருக்கும் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட பாதுகாவலர்களின் கவனம், வேடுவர் தலைவரின் மீதே இருந்தது. அவர் பாரம்பரிய முறைப்படி தனது தோளில் கோடரியை கொளுவியிருந்தார்.

இதனால், அவரையே ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் கண்காணித்தபடி இருந்தனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading