Local

சபைக்குள் சாரத்தை தூக்கிகாட்டி மூன்றிலிரண்டை பெரும்பான்மையை நிரூபித்துவிட்டேன் – ஐ.தே.க. எம்.பின் காமப் பேச்சு!

” சபைக்குள் சாரத்தை தூக்கிகாட்டி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிரூபித்துவிட்டேன். அதுபோதாது என்றால் தலைகீழாக நின்று மீண்டுமொருமுறை பெரும்பான்மையைக் காட்ட தயார்” –  என்று ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பியான திலிப் வெதஆராச்சி தெரிவித்தார்.

தங்காலையில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இரட்டை பாலியல் அர்த்தத்துடன் மேற்படி கருத்தை அவர் முன்வைத்தார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சிக்கே (113 உறுப்பினர்களின் ஆதரவு) ஆட்சியமைக்க அனுமதி வழங்கப்படவேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை.  அத்துடன், பெரும்பான்மையை நிரூபித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிடம் ஆட்சியை ஒப்படைக்க அது மறுத்துவருகின்றது.

இந்த பெரும்பான்மை பலம் விவகாரத்தாலேயே நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்றன. மஹிந்த அணியால் மிளகாய்த்தூள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று, கடுப்பாகிய ஐ.தே.க. எம்.பி., திலிப் வெதஆராச்சி – மஹிந்த அணிக்க பதிலடி கொடுக்கும் வகையில் சபைக்குள் வைத்து சாரத்தை தூக்கிகாட்டினார்.

இதுகுறித்தான விடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. அட…..இப்படியும் மூன்றிலிரண்டு பலத்தைக் காட்டலாம் என இரட்டை அர்த்தத்துடன் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தான் தலைகீழாக நின்றும் பெரும்பான்மை பலத்தை காட்ட தயார் என அவர் கூறியுள்ளார். குறித்த காணொளியும் சமூகவலைத்தளங்களில் ஹிட்டாகியுள்ளது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading