Local

வணக்கஸ்தலங்களுக்கு விசேட பாதுகாப்பு! அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு!!

தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வணக்கஸ்தலங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை (21) நடைபெற்றது.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக முழுமையானதொரு விசாரணை அறிக்கையை விரைவில் கையளிக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோருவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வணக்கஸ்தலங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்கவும், நாட்டில் இனியும் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது குறித்தும்,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவது எப்படி, சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading