Lead NewsLocal

கோழைத்தனமான தாக்குதல்கள்! குற்றவாளிகளைத் தண்டியுங்கள்!! – ஜனாதிபதி, பிரதமரிடம் சம்பந்தன் வலியுறுத்து

 

“கொழும்பிலும் மட்டக்களப்பிலும் நீர்கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்குவைத்து இன்று நடத்தப்பட்ட கோழைத்தனமான குண்டுத் தாக்குதல்களையிட்டு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். இந்தச் சம்பவங்களுக்குக் காரணமானவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன்.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

“இந்தக் கோழைத்தனமான, துக்ககரமான தாக்குதல்களில் தம் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் இணைந்து நிற்குமாறு இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுகின்றேன்.

கடும் போக்காளர்கள் இந்நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டு செல்லக்கூடாதபடி, நாம் ஒன்றிணைந்து பலமாக நிற்போம்” என்று இரா.சம்பந்தன் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading