Local

அரசமைப்புக்கு முரணாக செயற்படாதீர்! மைத்திரிக்கு ஐ.நா. செயலர் எச்சரிக்கை!!

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு அந்தப் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்ததன் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு சர்வதேச ரீதியில் உக்கிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இலங்கையில் ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்பட்டு அரசமைப்பின் பிரகாரம் செயற்பாடுகள் இடம்பெறவேண்டுமென இந்த உரையாடலின்போது ஐ.நா.செயலர் கேட்டுக்கொண்டார் என அறியமுடிகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading