Local

நாட்டில் உச்சகட்ட பாதுகாப்பு! ட்ரோன் கமராக்களுக்கும் தடை!!

இலங்கை வான் பரப்புக்குள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன் கெமராக்களை பறக்கவிடுவதற்கு நேற்று இரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது .

ஈஸ்டர் திருநாளன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களையடுத்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

முப்படையினர், பொலிஸார், விசேட பாதுகாப்பு படையினர் என ஒட்டுமொத்த பாதுகாப்பு தரப்பினரும் தேடுதல், சுற்றிவளைப்பு, சோதனை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

வாகனங்களை நிறுத்தி வைத்தல், பொதிகளை எவ்வாறு கையாளுதல் ஆகியவை குறித்து விசேட நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே – ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன் கமராக்களை பறக்கவிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடாளாவிய ரீதியில் முக்கிய இடங்களிலும், ஏனையப் பகுதிகளிலும் இன்றும் விசாரணை வேட்டை தொடரவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading