Lead NewsLocal

தீவிரவாதிகள் மத வெறியாட்டம்! தமிழ் – முஸ்லிம்களே அவதானம்!! – சம்பந்தன் அறிவுறுத்து

“இலங்கையில் தீவிரவாதிகளின் மத வெறியாட்டம் தொடரக்கூடும். எனவே, வடக்கு, கிழக்குவாழ் தமிழ் – முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். எமது மக்கள் தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இது தொடர்பில் ‘புதுச்சுடர்’ இணையத்தளத்திடம் அவர் இன்று மேலும் தெரிவிக்கையில்,

“உதிர்த்த ஞாயிறு தினமன்று மட்டக்களப்பு உட்பட நாட்டில் 8 இடங்களில் இடம்பெற்ற கோழைத்தனமான தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் நான் வலியுறுத்தியுள்ளேன்.

இதேவேளை, இலங்கையில் பல இடங்களில் வெடிகுண்டுகள் இன்னமும் மீட்கப்பட்டு வருகின்றன. தீவிரவாதிகளின் மத வெறியாட்டம் தொடரக்கூடும்.

எனவே, வடக்கு, கிழக்குவாழ் தமிழ் – முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். எமது மக்கள் தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழ் – முஸ்லிம்களின் ஒற்றுமை சீர்குலைய எவரும் இடமளிக்கக்கூடாது” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading