Local

வாட்டிவதைக்கிறது வறட்சி! இலட்சக்கணக்கானோர் பரிதவிப்பு!

நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீரைப் பெருவதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டுவருகின்றனர்.

அத்துடன், ஆறுகள் மற்றும் குளங்களின் நீர் மட்டமும் குறைவடைந்துள்ளது.  தாவரங்கள் செத்துமடிவதாலும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாலும் விவசாயிகள் செய்தவறியாது தவிக்கின்றனர்.

குறிப்பாக மஹாவெலி கங்கையின் நீர் மட்டம் 42 வீதமாக குறைவடைந்துள்ளதுடன், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் 40 அடி வரை குறைவடைந்துள்ளது.

கடும் வெப்பத்துடனான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவும் என இடர்முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில், குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறித்த நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading