Local

கஞ்சா கடத்தல் காரர்களின் கூடாரமாக வடக்கு? இன்றும் இருவர் மடக்கிப்பிடிப்பு!

பருத்தித்துறை கடற்கரையோரத்தில், சுமார் 133 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் கூட்டாக நடத்திய சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 88 கிலோகிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சா தொகை, சில நாட்களுக்கு முன்னர், கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

வடக்கில் கரையோரப்பகுதிகளில் தொடர்ச்சியாக கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டு வருகின்றது. கடல்மார்க்கமாக கடத்தப்பட்டு, வடக்குக்கு வந்து, பின்னர் அது நாட்டில் ஏனையப் பகுதிகளுக்கும் பகிரப்படுவதாக கூறப்படுகின்றது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading