Local

உயிர்ப்பு ஞாயிறு கொடூரம்: 13 நாடுகளைச் சேர்ந்தோர் பலி!

ஈஸ்டர் திருநாளன்று தீவிரவாதிகளால் இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 13 நாடுகளை சேர்ந்தோர் பலியாகியுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தோரில் 36 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் சீனா, இந்தியா, பங்களாதேஷ், டென்மார்க் ,ஜப்பான் ,நெதர்லாந்து , போர்த்துக்கல், சவூதிஅரேபியா, பிரான்ஸ் துருக்கி ,பிரிட்டன், அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா நாடுகளை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் 11பேர் இந்தியர்கள். பிரிட்டனை சேர்ந்த 6 பேரும், டெர்மார்கை சேர்ந்த மூவரும் இதில் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயங்களுக்குள்ளானவர்களும் 12 வெளிநாட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading