TechnologyWorld

ஆகாய பரப்பில் அசத்தும் விளம்பரம்!

ரஷ்யாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று வானத்தில் ஒளி வடிவில் விளம்பர பலகை வைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த நிறுவனம் சிறிய ரக செயற்கைக் கோள்களை பயன்படுத்தி வானத்தில் விளம்பர பலகை வைக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி, க்யூட்சீட்ஸ் எனப்படும் சிறிய ரக செயற்கைக் கோள்கள், பூமியில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும். அந்த செயற்களைகோள்கள் சூரிய ஒளியின் அடிப்படையில் செயல்படும்.

இரவு நேரத்தில் பிரமாண்ட வெளிச்சத்தில் விளம்பரங்களை அந்த செயற்கைகோள்கள் ஒளிப்பரப்பும்.

இந்த திட்டத்தை ஸ்டார் ராக்கெட் நிறுவனத்தை சேர்ந்த விளாடிலென் சிட்னிகோவ் வடிவமைத்துள்ளார். ஆனால் இந்த திட்டத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். செயற்கைக் கோள்கள் ஒளி மாசை ஏற்படுத்தி, நட்சத்திரங்களின் ஒளியை குறைத்துவிடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேபோல், சமூக வலைதளங்களிலும் இத்திட்டத்திற்கு எதிராக கருத்துகள் பரவ ஆரம்பித்துவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading