Local

EPF தொடர்பில் விசேட அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவுசெய்யும் புதிய நடைமுறை தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக, 0112 201 201 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனூடாக சிரமமின்றி தங்களது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென தொழில் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading