Local

EPF பங்களிப்பு செய்யக்கூடிய வயதெல்லையில் மாற்றம்

ஊழியர்சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு செய்யக் கூடிய குறைந்தபட்ச வயதெல்லையை மாற்றியமைப்பதற்கான உத்தரவு விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. 

இந்த வயதெல்லையை 14 முதல் 16 வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தற்போதுவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

அமைச்சர் நிமல்சிறிபால டீ சில்வா தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றதொழில் அமைச்சின் ஆலோசனைகுழுக் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading