World

F -35 ரக விமானம் மீது ஈரான் தாக்குதல்…!!!

ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவின் F -35 ரக விமானம் பலத்த சேதமடைந்துள்ளது.

ஈரானிய வான் பரப்பிற்குள் போர் தாக்குதலில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானப்படையின் F -35 Lightning II ரக போர் விமானம் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க விமான தளம் ஒன்றில் தாக்குதலுக்கு உள்ளான போர் விமானமானது அவசரமாக தரையிறக்கப்பட்டது.

F -35 ரக விமானம் மீது ஈரான் தாக்குதல்: மத்திய கிழக்கில் அவசர தரையிறக்கம் | U S F 35 Lighting Ii Fighter Jet Attacked By Iran

இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர்களை சுட்டிக்காட்டி, ஈரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க போர் விமானத்திற்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக CNN தெரிவித்துள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்ட தகவலில், ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது F -35 ரக விமானம் பாதிப்படைந்து இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.

விமானியின் தற்போதைய நிலை

தாக்குதலை தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும், அதிலிருந்த விமானியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமானத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், இது குறித்த முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading