Local

இந்தியா, சீனா, ஆஸ்திரேலியாவுக்கு பலாலியிலிருந்து விமான சேவைகள்! – கூட்டமைப்பிடம் தெரிவித்தார் ரணில்

பலாலி விமான ஓடுதளத்திலிருந்து இந்தியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு விமான சேவைகள் இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று அலரிமாளிகையில் சந்தித்தனர். இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“பலாலி விமானத்தள அபிவிருத்திப் பணிகள் துரிமாக நடைபெற்று வருகின்றன. அபிவிருத்திப் பணிகள் ஒக்டோபர் நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர் பலாலி விமான நிலையம் பிராந்திய நிலையமாக தரமுயர்த்தப்பட்டு இந்தியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்” என்று பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading