Lead NewsLocalNorth

வடக்கில் ஒரு இலட்சத்தைத் தாண்டியது இடரால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை! – கிளிநொச்சியில் மட்டும் 70 ஆயிரம் பேர் நிர்க்கதி

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 36 ஆயிரத்து 594 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

“3 ஆயிரத்து 258 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 424 பேர் இடம்பெயர்ந்து 32 இடைத்தங்கல் முகாங்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவாக 70 ஆயிரத்து 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று இடர் முகாமைத்துவ நிலையம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 322 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 286 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 176 பேர் இடர்பெயர்ந்து ஒரு இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 542 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் 4 ஆயிரத்து 755 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஆயிரத்து 512 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 713 பேர் இடம்பெயர்ந்து 10 தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்புபிரதேசத்தில் 82 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 512 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 331 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 4 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 719 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தில் 4 வீடுகள் முழுமையாகவும் 73 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

மாந்தை கிழக்குப் பிரதேச செயலர் பிரிவில் 439 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெலி ஓயா பிரதேச செயலர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் 9 ஆயிரத்து 733 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 166 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 789 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 501 பேர் 6 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கரைச்சிப் பிரதேசத்தில் வெள்ளத்தால் 25 வீடுகள் முழுமையாகவும் 99 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 7 ஆயிரத்து 865 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 801 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 713 பேர் 9 தற்காலிக முகாங்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கண்டாவளை பிரதேசத்தில் வெள்ளத்தால் 30 வீடுகள் முழுமையாகவும் 251 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 753 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர் ஒரு தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பூநகரி பிரதேசத்தில் வெள்ளத்தால் 2 வீடுகள் முழுமையாகவும் 520 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பச்சிளைப்பளை பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 218 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் ஒரு தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பச்சிளைப்பளை பிரதேசத்தில் வெள்ளத்தால் 122 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மன்னார்நகர் பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ளனர்.

நானாட்டன் பிரதேச செயலர் பிரிவில் காற்றின் தாக்கத்தால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 4 ஆயிரத்து 257 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 642 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 6 குடும்ங்களைச் சேர்ந்த 10 பேர் ஒரு தற்காலிய முகாமில் தங்கியுள்ளனர். கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 தொழில் முயற்சிகள் அழிவடைந்துள்ளன.

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 155 குடும்பங்களைச் சேர்ந்த 526 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 71 பேர் இரண்டு இடைத்தங்கல் முகாங்களில் தங்கியுள்ளனர். அத்துடன் பிரதேசத்தில் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading