LocalUp Country

அன்னதானம் உட்கொண்ட 42 பேர் வைத்தியசாலையில்!

திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தை  உட்கொண்ட 42 பேர்  ஒவ்வாமையால் வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்டதையடுத்து நேற்று (19) இரவு  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

மஸ்கெலியா நல்லத்தண்ணி லக் ஷபான  பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழாவின், 8 ஆம் நாள் பூஜையின்போது வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

07 சிறுவர்கள்,  உட்பட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 42 பேருக்கும் பாரிய பாதிப்புகள் இல்லை எனவும் உணவு ஒவ்வாமையினாலே வயிறோட்டம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், 03 சிறுவர்கள், 21 பெண்கள், 8  ஆண்கள் என 32 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகளும், நல்லதண்ணி பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

க.கிசாந்தன்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading