EastLocal

சவூதியில் கோர விபத்து: மருதமுனை இளைஞர் பலி! மேலும் இருவர் படுகாயம்!!

சவூதி அரேபியாவில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் அம்பாறை மாவட்டம், மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முகம்மட் ரிஹாஸ் உவைஸ் என்ற இளைஞரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் மருதமுனையைச் சேர்ந்த மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சவூதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-

நேற்று வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உணவு உண்பதற்காக இவர்கள் மூவரும் சவூதி அதிவேகப் பாதை வழியே சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த கார் இவர்கள் சென்ற வாகனத்துடன் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் சிக்கிய மூவரூம் மருதமுனையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒருவர் சம்பவ இடத்தில் மரணித்துள்ளார். ஏனைய இருவரில் ஒருவரின் கால் ஒன்று அகற்றப்பட்டுள்ளது எனவும், மற்றையவர் கோமா நிலையில் இருக்கின்றார் எனவும் தெரியவருகின்றது.

இவ்விபத்து தொடர்பில் சவூதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading