Local

மாகந்துர மதுஷ் – மேலும் பல தகவல்கள் கசிவு!

மாகந்துர மதூஷ}க்கும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகனுக்கும் தொடர்பிருப்பதாக பரபரப்பு தகவலை இன்று வெளியிட்டார் இராஜங்க அமைச்சர் அலவத்துவல.

நாடாளுமன்றத்தில் இன்றும் ( 08) மாகந்துர மதுஷ் தொடர்பில் கருத்துகள் வெளியிடப்பட்டன.

டுபாயில் கைதானவர்களில் இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்தவர் யாரென கூட்டு எதிரணி எம்.பி. உதயகம்மன்பில கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபை முதல்வர், இது தொடர்பில் விசாரணை நடைபெற்றுவருகிறது என்று கூறினார்.

அதன்பின்னர் கருத்து வெளியிட்ட  உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்அலவத்துவெல,

” கடவுச்சீட்டு விவகாரம் எமது அமைச்சின்கீழேயே வருகின்றது. டுபாயில் மாகந்துர மதூஷ் உள்ளிட்ட குழு கைதாகியுள்ள போதிலும் இராஜதந்திர கடவுச்சீட்டு எதுவும் மீட்கப்படவில்லை.

எனினும், மாகந்துர மகேஷ் குழுவுக்கும், முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகனுக்கும் தொடர்புள்ளது என தெரியவந்துள்ளது.” என்று கூறினார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading