Local

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு ‘பட்ஜட்’டில் அதிக நிதி ஒதுக்கீடு! – சுமந்திரன் எம்.பி. பாராட்டு

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு விசேடமாக 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

‘பட்ஜட்’ தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டமானது பொறுப்புணர்ச்சியுடன் செய்யப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு விசேடமாக 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இதனைச் சரியான முறையில் எடுத்துச் செயற்படுத்தினால், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது மட்டுமன்றி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களையும் அதிகரிக்க முடியும்.

அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த இந்தத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading