Local

அரசியல் நெருக்கடியை எப்படி தீர்ப்பது? பொதுத்தேர்தலை நடத்துமாறு மல்வத்தபீடம் வலியுறுத்து

அரசியல் நெருக்கடிக்கு ஒரே தீர்வு பொதுத் தேர்தலை நடத்துவதாகும் என மல்வத்த பீடத்தின் அனுநாயக்கர் அதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சபாநாயகரின் தீர்மானங்களும்- செயற்பாடுகளும் பாரபட்சமானதாக அமைந்திருப்பதாகவும் கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில்  கலந்துகொண்டு உரையாற்றுகையில் தேரர் குறிப்பிட்டார்.

சபாநாயகரின் செயற்பாடுகளால் நிறைவேற்று அதிகாரப்பீடத்திற்கும், சட்டவாக்க சபைக்கும் இடையில் முறுகல் நிலையை தோன்றுவிக்கலாம்
இதனால் முனவைக்கப்படும் வெவ்வேறு கருத்துக்களால் மக்கள் குழப்பமடையவும் நேரிடும். இதற்காகவே பொதுத் தேர்தல் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோருவதாக அதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading