Local

பெரும்பான்மையை நிரூபிப்பதில் மஹிந்த அணி இழுத்தடிப்பு – இன்றும் சபை அமர்வு புறக்கணிப்பு!

நாடாளுமன்ற அமர்வை இன்றைய (29) தினமும் புறக்கணிப்பதற்கு ஆளுங்கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய  தேசியம் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் சபை அமர்வில் தம்மால் பங்கேற்கமுடியாது என்றும், சபாநாயகர் கட்சிசார்பான போக்கை கைவிடும்வரை இந்நிலைமையே தொடரும் என்றும் மைத்திரி, மஹிந்த கூட்டணி உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் இன்று,  பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்தும் பிரேரணை மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. இப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் மஹிந்தவுக்கான  நிதி ஒதுக்கீடு  முடக்கப்படும்.

இதைதோற்கடிக்கவேண்டுமென்றால் மஹிந்த அணிக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு  அவசியம். அது இல்லாததன் காரணமாகவே சபை அமர்வை புறக்கணிக்கும் பாணியில் அவ்வணி பின்வாங்குவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி.  ஆகியவும் பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கவுள்ளன.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading