Local

“GOTA GO GAMA”வில் பதற்றம் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

காலி முகத்திடலுக்கு அருகில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

பிரதமருக்கு ஆதரவாக அணி திரண்ட மக்கள் காலி முகத்திலுக்குள் நுழைந்தததை அடுத்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள கூடரங்களை உடைக்கும் காட்சிகளை காணக்கூடியதாக உள்ளது இந்த தாக்குதலில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் என்றும் மேலும் பிரதமர் மஹிந்தவின் கேவலமான அசிங்கமான செயல் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading