Local

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எள்ளிநகையாடிய கோட்டாபய! – அவரை இரகசியமாகச் சந்தித்த சித்தர் கூறுகின்றார்

“போர் முடிந்த பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை.”

– இவ்வாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச கூறியுள்ளார்.

கோட்டாபாய ராஜபக்சவுடன் நேற்றுமுன்தினம் தான் நடத்திய சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

“யாரும் கூறாமலேயே 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லைய” என்று கோட்டாபய தன்னிடம் தெரிவித்தார் என சித்தார்த்தன் மேலும் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading