Local

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே எனக்கு எதிராக வழக்கு – கோட்டா

” ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே எனக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ” – என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ச இன்று காலை எமிரேட்ஸ் விமானத்தில் இலங்கை திரும்பினார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. கூட்டு எதிரணி எம்.பிக்களும் அணிதிரண்டு வந்திருந்தனர்.

இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட் கோட்டாபய,

” அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவே அங்கு சென்றிருந்தேன். அந்த பயணம் வெற்றியளித்தது.

எனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும், அது குறித்து எனக்கு இன்னும் உரிய வகையில் அறிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையிலேயே, அதை மையப்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  கீழ்தரமான அரசியலாகும் இது. ” என்று குறிப்பிட்டார்.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading