EastLocal

பொலிஸாரின் அசமந்தப்போக்கைக் கண்டித்து தென்கிழக்குப் பல்கலையில் மாபெரும் போராட்டம்!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார் அசமந்தமாக இருந்து வருவதனைக் கண்டித்து பல்கலைக்கழக சமூத்தினால் இன்று (22) பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது.

பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக இடம்பெற்ற இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்விசார், கல்விசாரா ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்ககழக நிர்வாகக் கட்டடிடத் தொகுதியை ஆக்கிரமித்து பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயற்பாட்டிற்கு தடையாக இருந்துவரும் மாணவர்களுக்கெதிராக பல்வேறுபட்ட சட்ட நடவடிக்கைகள் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப் படுத்துவதில் பொலிஸார் அசமந்தமாக இருந்து வருவதனைக் கண்டித்தே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடம் மற்றும் பொறியல்பீடம் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மாணவர்களை வெளியேற்றியதைக் கண்டித்தும், அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் கட்டடத் தொகுதியை ஆக்கிரமித்து கடந்த 12 ஆம்திகதி முதல் 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனை தடுக்கும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகம் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்த நிலையில், பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைப்பெற்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு எத்தனித்த போதும் குறித்த மாணவர்கள் அதனையும் எதிர்த்து தொடா்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading