World

உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை திறப்பு!

சீனா – ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை (23) திறக்கப்படுகின்றது

ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்ல ஏதுவாக பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சீனா – ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் இதுவாகும்

உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு நாளை திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின் உதவியால் சீனா – ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணியிலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீன திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பாலம் உள்ளது.

68 மில்லியன் மக்களை இணைக்கும் இந்தப் பாலம், சுற்றுலாப் பயணிகள் எளிதாக கடந்து செல்ல வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தில் பயணம் செய்ய சிறப்பு வாடகை கார்களை பயன்படுத்த வேண்டும் அல்லது விரைவுப் பேருந்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட இருந்த இந்தப் பாலம், மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தாமதங்களால் தள்ளிப்போடப்பட்டு வந்த நிலையில், நாளை திறக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading