Local

ஹக்கீம், ரிஷாத் இரட்டை வேடம்! – அம்பலமாகியுள்ளது என்கிறது மஹிந்த அணி

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளதால் அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பதவி ஆசை பிடித்து அலைகின்றார்கள். அதற்காக ரணிலின் வாலைப் பிடித்துக்கொண்டு திரிகின்றார்கள். மக்கள் நலன் தொடர்பில் இவர்களுக்கு சிறிதளவேனும் அக்கறையில்லை. எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களுக்கு முஸ்லிம் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading