Local

சஜித்தே அரச தலைவர்; இதுவே எங்கள் இலக்கு! – ஹரின் திட்டவட்டம்

“ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்குவதே எமது பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது. இதற்காக முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.”

– இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து பதுளையில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“குடும்ப ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் ஆணையை மதிக்கும் வேட்பாளரையே தொடர்ந்து களமிறக்கியுள்ளது. இந்த ஜனநாயக பொதுக்கொள்கையே இனியும் தொடரும்.

நாட்டு மக்களுக்கும், கட்சிக்கும் சேவையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்குவதே எமது பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது. இதற்காக முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

அவரை வெற்றிபெறச் செய்ய நாம் எந்நிலைக்கும் செல்லத் யார். உயிரைப் பணயம் வைத்தேனும் அவரை ஜனாதிபதியாக்குவோம். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயக மிக்க அரசு நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading