LocalUp Country

கழுத்தை நெறித்து பெண் அதிகாரியின் தங்க சங்கிலி பறிப்பு ! சினிமாப்பாணியில் ஹட்டனில் கொள்ளை!!

ஹட்டன் நீதிமன்ற வீதியில் நேற்று (08) மாலை 5.45 மணியளவில் வேலைக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த நோர்வூட் பிரதேச சபையின் பெண் அதிகாரியொருவரின் கழுத்தை நெறித்து தங்கச்சங்கலியினை அபகரித்துச்சென்ற நபர் ஒருவரை பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மடக்கிப்பிடித்துள்ளனர்.

குறித்த பெண் தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை,  பின்தொடர்ந்த நபர் அவரது தங்கச்சங்கிலியினை அபகரித்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த பெண் கூச்சலிட்ட , அட்டன் டிக்கோயா நகரசபையின் காவலாளி , பிரதேசவாசிகள்,பொலிஸார் ஆகியோர் இணைந்து திருடனை துரத்திப் பிடித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து அவரிடமிருந்து தங்கச்சங்கிலி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்கச்சங்கிலி பறிக்கும் போது பெண்மணியின் கழுத்தில் சிறிய காயங்களும் ஏற்பட்டுள்ளன.

சந்தேகநபர் பத்தனை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என்றும் இவர் கொழும்பு பகுதியில் தரகர் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

க.கிசாந்தன்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading