Local

சுகாதார அமைச்சின் விசேட அறிவித்தல்! அருகிலுள்ள வைத்தியசாலையில் பதிவு செய்யுமாறு வலியுறுத்தல்!!

அனைவரையும் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் பதிவு செய்துகொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான நடவடிக்கை மே 6 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க தெரிவித்தார்.

பிரதேச வைத்தியசாலைகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இப்  புதிய செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

” 60 வைத்தியசாலைகளில் இந்த திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார சேவைகளை வழங்கப்படவுள்ளது.  அப்பதிவின் பின்னர் அந்த வைத்தியசாலையில்தான் சிகிச்சைபெற வேண்டும் என்ற அவசியமில்லை.

வழமை போல நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் மருத்துவ சேவைகளை எவ்வித இடையூறுமின்றி அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும்.

பிரதேச வைத்தியசாலைகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்” என்றும் குறிப்பிட்டார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading