Local

மாலைநேர மழை நீடிக்கும்! இடி மின்னல் குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

மாலைவேளையில் கடும் மழையுடன்கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றைய தினம் மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமத்திய , மேல், வடக்கு மாகாணங்களில்  மழைபெய்து வருகின்றது. 100 வீத மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, இடியுடன் கூடிய பலத்த மழை வீழ்ச்சி எதிர்வரும் சில தினங்களுக்கு பதிவாகக்கூடும்  என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, இடி மின்னலுடன் கூடிய மழையின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இடிமின்னலுடனான மழையின்போது  திறந்தவௌியில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும், கட்டடம் அல்லது பாதுகாப்பான வாகனங்களில் இருக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் வீசிய பலத்த காற்று காரணமாக சுமார் 300 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading