Local

மத அடிப்படையில் தமிழர் பிரிவதற்கு இடமளியேன்! – அமைச்சர் மனோ உறுதி

தமிழ் மக்களை மத அடிப்படையில் பிரிவதற்கு இடமளிக்கமுடியாது என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்றுப் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்தக் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் மத்தியில் மத வன்முறையைத் தூண்டி அதனூடாக அரசியல் செய்யச் சிலர் முற்படுகின்றனர் எனத் தெரிவித்திருந்தார்.

அத்துடன், இது குறித்து விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்தநிலையில் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்குப் பதில் வழங்கியபோதே அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார்.

விரைவில் மன்னாருக்கு விஜயம் செய்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் இணைந்து பேசி இந்த பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading