LocalNorth

வடக்கு பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை!

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தைப்பொங்கல் தினம் என்பதால் அதற்கு முதல் நாள் திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்குப் பதிலாக அடுத்துவரும் வார இறுதி நாள் ஒன்றில் பாடசாலையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் கூறியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading