LocalNorth

தீ விபத்தில் வீடு நாசம்! – உடுப்பிட்டியில் சம்பவம்

யாழ்ப்பாணம், வடமராட்சி – உடுப்பிட்டிப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடொன்று சேதமடைந்துள்ளது. மின் ஒழுக்கால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை பகல் வீட்டில் தீப்பற்றியுள்ளது. அங்குள்ள பூஜை அறையிலேயே முதலில் தீ பற்றிக் கொண்டது என்று கூறப்படுகின்றது.

அந்த அறை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. அறையில் இருந்த பொருள்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. 60 ஆயிரம் ரூபா பணம், 3 பவுண் நகைகள் தீயில் நாசமாகியுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading