Local

முறையற்ற கைதுகள்: கவனம் செலுத்துங்கள்! – பதில் பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

சட்டவிரோத கைதுகள் – முறையற்ற ரீதியில் இடம்பெறும் கைதுகள் குறித்து பொலிஸ் திணைக்களம் கவனம் செலுத்த வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வலியுறுத்தியுள்ளது.

ஒருவரைக் கைது செய்யும்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் குறித்து அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதேவேளை, தவறான கைதுகளால் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசமான அனுபவங்களையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

கடிதத்தின் பிரதி இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading