LocalSports

குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்கிறேன்! – சனத் ஜயசூரிய தெரிவிப்பு

தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு விசாரணைகளுக்கு ஒத்துழைக்காமையைத் தொடர்ந்து
சனத் ஜயசூரியவுக்கு இரண்டு வருடங்களுக்கு கிரிக்கெட்டுடன் தொடர்புடைய விடயங்களில் செயற்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியமை தொடர்பிலேயே அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சனத் ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதில் விசாரணைகளுக்கெனக் கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டை ஆகியவற்றைச் சர்வதேச கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கு வழங்காமை குற்றமாகும்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading