Lead NewsLocal

தடைகளைத் தகர்த்தெறிந்து நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்பதற்குத் தயாராகிவிட்டேன்! – சஜித் அதிரடி அறிவிப்பு

யார் தடுத்தாலும் நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளத் தான் தயாராகிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் அங்கு உரையாற்றும்போது மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“நாட்டில் இன்று ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பொறுப்பை இறுதியில் யார் ஏற்றுக்கொள்வார் என்பதுதான் மக்களின் ஒரே கேள்வியாக இருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில், நான் ஒரு விடயத்தை வெளிப்படையாகவே கூறியுள்ளேன். அதாவது, ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கத் தயாராகவே இருக்கின்றேன் என்று அறிவித்துவிட்டேன்.

இனிமேல் இந்த விடயத்தில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. யார் எந்தப் பிரச்சினையை எமக்கு ஏற்படுத்தினாலும், எவ்வாறான தடைகள் வந்தாலும் நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள நான் தயாராகிவிட்டேன் என்பதைப் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading