Sports

சனத்துக்கு எதிராக ஐ.சி.சி. களத்தில் – பதிலளிக்க 14 நாட்கள் கெடு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய, சர்வதேச கிரிக்கெட் சபையின் ( ஐ.சி.சி.) ஒழுங்குவிதிகளை மீறியுள்ளார் என ஐ.சி.சி. குற்றஞ்சாட்டியுள்ளது.


ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமை, விசாரணைக்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளே அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐ.சி.சியின் ஊழல் தடுப்பு பிரிவின் சரத்துகளை மீறினார் என்ற அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இக்குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாயின் அல்லது மேன்முறையீடு செய்வதாயின் தமது நிலைப்பாட்டை அறிவிக்கு சனத் ஜயசூரியவுக்கு இன்றிலிருந்து 14 நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading