Local

தீபாவளி முற்பணம் வழங்காவிடின் மாபெரும் போராட்டம் வெடிக்கும்! -எச்சரிக்கின்றார் ஆறுமுகம் தொண்டமான்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்கொடுப்பனவான 10 ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என முதலாளிமார் சம்மேளனத்திடம் அறிவித்துள்ளதாகவும், அவ்வாறு வழங்கவில்லை என்றால் பூரண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இன்று அல்லது நாளை நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகளையும் சந்தித்து அவர்களது ஆதரவையும் பெறப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளை பிரதமருடைய பதில் தெரிந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்று தீர்மானிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading