பதற்றத்தையடுத்து இந்தியா – பாகிஸ்தான் வான்பகுதியில் விமான சேவைகள் பாதிப்பு! – திரும்பிச் சென்றன சர்வதேச விமானங்கள்
இந்தியா – பாகிஸ்தான் வான்பகுதியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச விமானங்கள் சில திரும்பிச் சென்றுள்ளன.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியுள்ளது. பாகிஸ்தான் தன்னுடைய பிராந்தியம் முழுவதும் விமான சேவையை நிறுத்தியுள்ளது.
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விமானச் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
டில்லிக்கு வடக்குப் பகுதியில் விமானப்படை விமானங்கள் தவிர பிற விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் காரணமாக சர்வதேச விமானச் சேவையில் பாதிப்பு நேரிட்டுள்ளது.
இவ்வழியாக செல்வதை விமானங்கள் தவிர்த்துள்ளன. சில விமானங்கள் அப்பகுதியில் இருந்து திரும்பி புறப்பட்ட இடத்திற்கே சென்றுள்ளன. பிற விமானங்கள் பிற வான் மார்க்கத்தைப் பயன்படுத்தியுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.

