Lead NewsLocal

மைத்திரியின் சட்டவிரோத செயலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனங்கள்! – இந்தியா, சீனா மௌனம்

இலங்கையின் அரசமைப்பு சட்டத்தை மீறி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு அரசியல் நெருக்கடியை மேலும் ஆழமாக்கும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனநாயகக் கட்டமைப்பின் கீழ் இலங்கையில் நீதியான நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புவதாக அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது.

இதேபோல் பிரிட்டனின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட், இலங்கை அரசியல் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.

அரசமைப்பின் பிரகாரம் , ஜனநாயக கோட்பாடுகளுக்கு அமைய அனைத்துத் தரப்பினரும் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை மற்றும் நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள கனடா, இந்த நிலைமை ஜனநாயக கோட்பாடுகளையும் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறலையும் பாதித்துவிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.

ஆனால், இலங்கை நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பில் இந்தியாவும் சீனாவும் இதுவரை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இலங்கை நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பில் இந்தியாவும் சீனாவும் இதுவரை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading