Lead NewsLocal

சர்வதேசத்துடன் மோதினால் பலவற்றை இழக்க நேரிடும்! – மங்கள எச்சரிக்கை

சர்வதேச சமூகத்துடன் மோதும் கொள்கையை இலங்கை வெளிவிவகாரத்துறை பின்பற்றக்கூடாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது ‘ருவிட்டர்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தனது கடந்த காலத்தின் தனிமைப்பட்ட, மோதல் போக்கைப் பின்பற்றுகின்ற வெளிவிவகாரத்துறைக் கொள்கைக்குத் திரும்பக்கூடாது என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தின் வெளிவிவகாரத்துறைக் கொள்கைகளை மீண்டும் பின்பற்றினால் கடந்த நான்கு வருடங்களில் கிடைத்த பல நன்மைகளை இழக்க வேண்டிவரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய இராணுவத் தளபதி தொடர்பாக இலங்கை அரசு எடுத்துள்ள முடிவில் வெளிநாட்டுத் தூதுவர்களைத் தலையிட வேண்டாம் என வெளிவிவகாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading