Local

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டோர்மீது கழுகுப்பார்வை – விசேட பொலிஸ் குழு களத்தில்!

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளின் கண்காணிப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் அடங்கிய குழுவொன்று பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.

சி.ஐ.டிக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையிலான இக்குழுவில்,

போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.சி.ஏ.தனபால, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பொலிஸ் அத்தியட்சகர்களான ருவன் குணசேகர, நிஷாந்த சொய்சா மற்றும் ஏ.கே.ஹேமந்த ஆகியோரும்  அங்கம் வகிக்கின்றனர்.

டுபாயில் கைதாகியிருந்த கஞ்சிப்பான இம்ரான் உட்பட ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading