Sports

IPL முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி!

கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடர் கொரோனா சூழ்நிலைக்கு மத்தியில் இன்று (19) ஆரம்பமாகியுள்ளது.

இந்தத் தொடரின் முதலாவது போட்டி, அபுதாபியில் உள்ள செய்க் ஷயெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவுா7.30 மணிக்கு ஆரம்பமாகியது. இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுக்களினால் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, குயின்ரன் டி கொஹ் மற்றும் திவாரி ஆகியோரின் நிதான துடுப்பாட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், சவுரப் திவாரி 42 ஓட்டங்களையும் குயின்ரன் டி கொஹ் 33 ஓட்டங்களையும் கிரன் பொலார்ட் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்னை அணி சார்பில், லுங்கி நெகிடி மூன்று விக்கெட்டுகளையும் தீபக் சாகர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், 163 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட களமிறங்கி சென்னை சுப்பர் கிங்ஸ் 19.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது.

சென்னையின் துடுப்பாட்டத்தில் அம்பாத்தி ராயுடு 48 பந்துகளில் 71 ஓட்டங்களையும், பப்டூ ப்ளசிஸ் ஆட்டமிழக்காது 44 பந்துகளில் 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

மும்பையின் பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட், ஜேம்ஸ் பட்ரின்சன், ஜஸ்விந்தர் பும்ரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading