Local

இலங்கையில் இராணுவத் தளமா? – அமெரிக்கா அடியோடு நிராகரிப்பு

இலங்கையில் இராணுவத் தளம் அமைப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது என வெளியாகிய செய்திகளை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அடியோடு நிராகரித்துள்ளது.

திருகோணமலையில் தளம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு இலங்கை அனுமதியளிக்கவுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டியிருந்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர் நான்சி வான் ஹோர்ன்,

“இலங்கையில் இராணுவத் தளத்தை நிறுவுவதற்கு அமெரிக்கா முயற்சித்து வருவதாக வெளியான தவறான செய்திகளை அமெரிக்கத் தூதரகம் அறிந்திருக்கின்றது. இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை.

அதேவேளை, அமெரிக்க – இலங்கை இராணுவ ஒத்துழைப்பானது, அனர்த்த தயார் நிலை, நிவாரணம், கடல் பாதுகாப்பு பயிற்சி மற்றும் பயிற்சிகளை வலுப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதே அன்றி, அமெரிக்காவின் தளம் ஒன்றை அமைப்பது அதன் ஒரு அங்கமாக இருந்ததில்லை,

இதனை நிறுவுவது தொடர்பாக கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading